×

கும்பகோணம் திமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு

கும்பகோணம், ஏப்.11: தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கும்பகோணம் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் தமிழழகன் தலைமையில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே திறக்கப்பட்ட இந்த கோடைகால தண்ணீர் பந்தலை அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், எம்.பி கல்யாணசுந்தரம் மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகர, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கும்பகோணம் திமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam DMK ,Summer ,Nemor Pandhal ,Kumbakonam ,DMK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...