×

குறைதீர் முகாமில் 347 மனுக்களுக்கு தீர்வு

சிவகங்கை, ஏப்.10: சிவகங்கை மாவட்ட எஸ்பி செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை உட்கோட்டம், காரைக்குடி உட்கோட்டம், திருப்பத்தூர் உட்கோட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி, தேவகோட்டை உட்கோட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய 7 இடங்களில் டிஎஸ்பி அலுவலகங்கள் சார்பில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறை தீர் முகாம் நடந்தது. இந்த முகாமில் சம்பந்தப்பட்ட உட்கோட்டங்களில் தொடர்புடைய பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டனர். இதில் காவல்துறை தொடர்பான 460 மனுக்கள் பெறப்பட்டு அதில் 347 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post குறைதீர் முகாமில் 347 மனுக்களுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,SP Senthilkumar ,Sivagangai subdistrict ,Karaikudi subdistrict ,Tiruppathur ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...