×

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

மதுரை, ஏப்.10: மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. மதுரை ஆர்டிஓ (பொறுப்பு) பிர்தவுஸ் பாத்திமா தலைமை வகித்து மனுக்களை பெற்றார். இதில், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, வாடிப்பட்டி ஆகி மூன்று தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர்.இந்நிகழ்ச்சியில், ஆர்டிஓவின் நேர்முக உதவியாளரான தாசில்தார் சிவபாலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai District Revenue Commissioner ,Madurai RTO ,Disability Grievance Camp ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!