×

அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணி துவக்கம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்தார். மேலும், ஒன்றிய, நகர செயலாளர்களிடம் அதற்கான படிவங்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ‘அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2.50 கோடியாக உயர்த்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த குறிக்கோளை எட்டுவதற்கு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என்றார்.
நிகழ்ச்சியில், மாநில விவசாய பிரிவு தலைவர் டிஆர் அன்பழகன், அசோக்குமார், பழனிசாமி, பொன்னுவேல், சங்கர், நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, அங்குராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Dharmapuri ,District ,Anbazhakan ,Dinakaran ,
× RELATED 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு