×

அருப்புக்கோட்டையில் புதிய பொலிவுடன் சுப்ரீம் பியூட்டி பார்லர் திறப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தெற்குத் தெரு பழைய பேருந்து நிலையம் ரோட்டில் ஐ.சி.ஐ.சி வங்கி எதிரில் புதிய பொலிவுடன் சுப்ரீம் பியூட்டி பார்லர் திறப்பு விழா நடந்தது. அருப்புக்கோட்டையில் கடந்த 1999ம் ஆண்டு முதல் சுப்ரீம் பியூட்டி பார்லர் செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய பொலிவுடன் இங்கு டிரைய்னிங் இன்ஸ்ட்டியூட், பிரைடல் ஸ்டுடியோ, ஹேர் கிளினிக் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய பார்லரை சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரபா ரெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார், நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி கமிஷனர்அசோக்குமார், நகர்மன்றத் துணைத்தலைவர் பழனிச்சாமி, நகர திமுக செயலாளர் ஏ.கே.மணி, நகர்மன்ற உறுப்பினர்கள் அல்லிராணி, மீனாட்சி, டுவீங்கிளின் ஞானபிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பியூட்டி கேர் காஸ்மெட்டாலஜிஸ்ட் ஜெயலலிதா முத்துவேல் மற்றும் சுப்ரீம் பியூட்டி பார்லர் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post அருப்புக்கோட்டையில் புதிய பொலிவுடன் சுப்ரீம் பியூட்டி பார்லர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Beauty Parlor ,Aruppukkottai ,Supreme Beauty ,ICI Bank ,South Street Old Bus Station Road ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில்...