×

விஜயபிரபாகரன் பாராட்டு சிறப்பாக ஆட்சி செய்கிறார் மு.க.ஸ்டாலின்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அளித்த பேட்டி: ‘‘எங்கள் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. திமுகவுடன் கூட்டணி குறித்து காலம் பதில் சொல்லும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது. பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சிறிது நாளாகும். எங்களால் முடிந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் விஜயகாந்த் சந்திப்பார்’’ என்றார்….

The post விஜயபிரபாகரன் பாராட்டு சிறப்பாக ஆட்சி செய்கிறார் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Vijayabrabhabakaran ,G.K. Stalin ,Thiruviliputtur ,Thiruviliputtur, Virudunagar District ,Thiruvilliputtur ,Vijayaprabakaran ,B.C. ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...