×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சுவாமி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்படி இன்று அரசு விடுமுறை நாளை மற்றும் நாளைமறுதினம் சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரூ.300 மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை உள்ளிட்ட பல்வேறுகட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர திருப்பதியில் சீனிவாச காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த டோக்கன்களை பெறுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச டோக்கன்களை பெறுவதற்கு சுமார் 2 கிலோமீட்டருக்கு மேல் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை 60 ஆயிரத்து 101 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.4.03 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி எந்தவித டோக்கன்களும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்சில் 30 அறைகளில் காத்திருக்கின்றனர். இதனால் சுவாமி தரிசனத்திற்கு 30 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Edemalayan Temple ,Tirumalai ,Tirupati Etemalayan temple ,Tirapati Ethemalayan ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...