×

பாரில் தகராறு 3 பேர் கைது

திருச்சி, ஏப்.7: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(38). இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு 11.30 மணிக்கு பாருக்கு வந்த வாலிபர்கள் 3 பேர் பிரகாசிடம் மதுபானம் கேட்டனர். அவர் விற்பனை நேரம் முடிந்து விட்டது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பாரில் இருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சிந்தாமணி அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த அபி(எ) அபிஷேக்(19), மேலச்சிந்தாமணி கொசமேட்டு தெருவை சேர்ந்த சிவகுரு(22), மண்ணச்சநல்லூர் வலையூரை சேர்ந்த மணி(எ) மணிகண்டன்(18) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பாரில் தகராறு 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,Prakash ,Mannachanallur Nadutheru, Tiruchi district ,Chatram ,Dinakaran ,
× RELATED மணல் திருடியவருக்கு போலீசார் வலை