×

ஸ்ரீ அபிராமசுந்தரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா

ஊட்டி, ஏப். 7: ஊட்டி மாரியம்மன் நேற்று ஸ்ரீ அபிராம சுந்தரி அலங்காரத்தில், பூபல்லாக்கு வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் ஒரு மாதகாலம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் போது, நாள் தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வருவது வழக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் இந்த வீதி உலா நடத்தப்படுகிறது. இந்நிலையில், இம்முறை கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.

20ம் ேததி முதல் அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்திலும், அலங்காரத்தில் வீதி உலா அழைத்து வருகின்றனர். நேற்று மாரியம்மன்ஸ்ரீ அபிராம சுந்தரி அலங்காரத்தில், பூபல்லாக்கு வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். மாரியம்மன் கோயிலில் துவங்கிய வீதி உலா கமர்சியல் சாலை, காபி அவுஸ், லோயர் பஜார் மற்றும் மெயின் பஜார் வழியாக தேர்பவனி வந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

The post ஸ்ரீ அபிராமசுந்தரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Amman Vethi Ula ,Sri ,Abhramasundari ,Mariamman ,Shree ,Abram Sundari ,Amman ,Bhuballaku ,Shree Abramsundari ,
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்