×
Saravana Stores

தாம்பரம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளதால் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: தாம்பரம் தொகுதி மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளதால், அதை தனி மாவட்டமாக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வலியுறுத்தி பேசினார். சட்டப் பேரவையில் நேற்று மாலை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தாம்பரம் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா(திமுக) பேசியதாவது: கூட்டுறவு துறை முக்கியமான துறை. கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி என்பது ஒரு காலத்தில் பல்வேறு வங்கிகள் இருந்தது. அதன் பின்பு பல்வேறு தனியார் வங்கிகள் இருந்தது. மாநில மற்றும் மாவட்ட அளவில் வங்கிகள் இருக்கிறது. ஆனாலும் கூட்டுறவு சங்க வங்கியில் தான் குறைந்த வட்டியில் மக்களுக்கு கடன் கொடுக்கிறோம்.

மகாராஷ்டிராவில் தான் அதிக தொழிற்சாலை இருக்கிறது என்பார்கள். ஆனால் மகாராஷ்டிராவை விட கூடுதல் தொழிற்சாலைகளும், சிறு குறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் அதிகம். வங்கிகள் எல்லாம் ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறது. ஒன்றிய அரசு கொரோனா காலத்தில், ஒரு லட்சத்து 74ஆயிரம் கோடி பணத்தை ரிசர்வ் வங்கியில் இருந்து எடுத்தது. பொருளாதார நிபுணர்கள் எல்லாம் ரிசர்வ் வங்கியில் இருந்து எந்த காலத்திலும் பணத்தை எடுக்கக் கூடாது என்று கூறினார்கள். ஆனால் ஒன்றிய அரசு இந்த பணத்தை எடுத்தார்கள். இப்போது தமிழ்நாடு அரசு இவ்வளவு பொருளாதார நெருக்கடியிலும் இவ்வளவு அரசு ஊழியர்களை வைத்துக் கொண்டுள்ள நிலையிலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறது.

கொரோனா காலத்திலும் கூட சிறு, குறு தொழிற்சாலைகள், நடைபாதை வியாபாரிகள், கைம்பெண்களுக்கு என அனைத்து ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டது. சிவில் சப்ளை எப்படி செயல்படுகிறது, அதன் வளர்ச்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மேன் பவர் குறைவாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் எங்ெகல்லாம் ரேசன் கடை சரியில்லை என்ற ஒரு நிலை இருக்கிறதோ, அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தாம்பரம் மையப் பகுதியில் இருப்பதால் சிவில் சப்ளை குடோன் ஒன்றை அமைத்து விநியோகம் செய்தால் விரைவாக சென்றடைய முடியும். தாம்பரம் தொகுதியை பொறுத்தவரை, 1996 முதல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தை நிலையில் இருந்து இந்த தொகுதியை பார்த்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு தாம்பரமானது சென்னைக்கு அடுத்த படியாக மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. மையப் பகுதியாக மாறி வருகிறது. 14 லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மாறப் போகிறது. வண்டலூரையும் இணைத்தால் அங்கு மிகப் பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் இருக்கிறது. காவல் துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக மிகப் பெரிய வியாபார தலமாக உள்ளது. ஒரு நாளைக்கு 10லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய இடமாக உள்ளது. எனவே தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தாம்பரமானது சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. மையப் பகுதியாக மாறி வருகிறது. 14 லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மாறப் போகிறது.

The post தாம்பரம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளதால் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,SR Raja ,MLA ,CHENNAI ,DMK ,chief minister ,SR ,Raja MLA ,Dinakaran ,
× RELATED டெங்கு கொசுப்புழு உற்பத்தி செய்த...