×

வில்லன்கள் கையில் இரட்டை இலை எடப்பாடியிடம் சென்றால் அதிமுக அழிவை சந்திக்கும்: டிடிவி.தினகரன் ஆவேசம்

திருமங்கலம்: எடப்பாடி பழனிசாமியிடம் சென்றால் அதிமுக அழிவை சந்திக்கும் என டிடிவி.தினகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ஏற்புடையது அல்ல. விளைநிலங்களில் வைரமே கிடைத்தாலும் தங்களுக்கு தேவையில்லை என அந்த பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர். அதிமுக விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் வரையில் சென்று ஓ.பன்னீர்செல்வம் சட்ட போராட்டம் நடத்துவார்.

ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தால், அதிமுகவையும் இரட்டை இலையையும் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிடும். ஏற்கனவே எடப்பாடி கையில் சிக்கியுள்ள கட்சி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. எம்ஜிஆர் கையில் இருந்த இரட்டை இலை தற்போது சினிமா வில்லன்கள் கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போல் உள்ளது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அதிமுகவை மீட்டெடுக்கும் நிலை உருவாகும். அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்தால் மட்டுமே நல்லது. இவ்வாறு கூறினார்.

The post வில்லன்கள் கையில் இரட்டை இலை எடப்பாடியிடம் சென்றால் அதிமுக அழிவை சந்திக்கும்: டிடிவி.தினகரன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinagaran ,Thirumangalam ,Edapadi ,Palanisamy ,Madurai District Thrimangalam ,Dinakaran ,
× RELATED மழைநீர் பாதிப்பில் இருந்து...