×

நாளை மறுநாள் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ள ஓபிஸ், இபிஎஸ்

சென்னை: நாளை மறுநாள் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரம் கேட்டுள்ளனர்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் தமிழ்நாடு வர உள்ளார். தெலங்கானாவில் தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்துவிட்டு, மதியம் 3 மணியளவில் சென்னை வர உள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் முதல்நாள் பொறுத்தவரை 3 மணியிலிருந்து 7 மணி வரை அவரின் அனைத்து நிகழ்வுகளும் உடனடியாக நிறைவு செய்யப்பட உள்ளது. இதையடுத்து 7 மணிக்கு பிறகு பிரதமர் சென்னையிலிருந்து மைசூருக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.

இதன் காரணமாக பிரதமர் மோடி மைசூருக்கு செல்வதற்கு முன்பாகவே அவரை தனித்தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரம் கேட்டுள்ளனர் என பாஜக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த சூழலில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதை உறுதி செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிலேயே பிரதமருடனான சந்திப்பை நிகழ்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு பிரதமரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

அதே போன்று ஓபிஸ் பொறுத்தவரை, அதிமுகவை கைப்பற்றுவதற்கான வழக்குகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ள நிலையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டு நேரம் கேட்டகப்பட்டுள்ளது.

ஓபிஸ், இபிஎஸ் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை மறுநாள் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ள ஓபிஸ், இபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Obiz ,EPS ,Modi ,Tamil Nadu ,Chennai ,Edappadi Palanisamy ,OC ,Bannerselvam ,Time ,
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...