×

ஐநா சபை புள்ளியியல் ஆணைய தேர்தல்: அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி; வெளியுறவு துறை அமைச்சர் வாழ்த்து

நியூயார்க்: ஐநா சபை புள்ளியியல் ஆணைய தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணைய தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது. இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும், சீனா 19 ஓட்டுகளும், யுஏஇ 15 ஓட்டுகளும் பெற்றன. தென் கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 2வது வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மீதமுள்ள ஆசிய பசிபிக் மாநிலங்களின் உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அர்ஜென்டினா, சியரா லியோன், ஸ்லோவேனியா, உக்ரைன், தான்சானியா ஐக்கிய குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனவரி 1, 2024 முதல் 4 ஆண்டு பதவி காலத்திற்கான அங்கீகாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதன்படி ஐநா புள்ளியியல் ஆணையத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில், “2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி 4 ஆண்டு காலத்திற்கான மிக உயர்ந்த ஐநா புள்ளியியல் அமைப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு போட்டி தேர்தலில் மிகவும் வலுவாக வெற்றி பெற்றதற்காக, இந்திய யு.என்.நியூயார்க் அணிக்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

The post ஐநா சபை புள்ளியியல் ஆணைய தேர்தல்: அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி; வெளியுறவு துறை அமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : UN ,Statistical Commission Elections ,India ,Minister of External Affairs ,New York ,Statistical ,Commission ,Dinakaran ,
× RELATED 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார...