×

ஹமாஸ் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலி

டெயர் அல் பலா: ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பாலஸ்தீன ஹமாஸ் படைக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஏழு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசாவின் பெரும்பாலான இடங்கள் சின்னாபின்னமாகி விட்டன.

இதனால் அங்கு உள்ளவர்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர். சர்வதேச நாடுகள் அனுப்பும் உதவிகள் ரபா எல்லை வழியாக தான் பாலஸ்தீனத்துக்கு கொண்டு வரப்படுகின்றது. இதனால் ரபாவில் ராணுவ தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டிருந்தது. நேற்றுமுன்தினம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்தது.

இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில்,பாலஸ்தீனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ரபா மீது இஸ்ரேல் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தியது.இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் இஸ்ரேல் தாக்குதலின் இலக்காக இருந்தது. இதில் பலியானவர்களில் பல பெண்கள், சிறுவர்கள் படுகாயமடைந்தனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் படையின் 2 மூத்த போராளிகள் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

The post ஹமாஸ் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Israel ,on ,Palestine ,Hamas ,missile ,Dayr al Bala ,army ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்