×
Saravana Stores

2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9சதவீதம்: ஐநா அறிக்கையில் தகவல்

ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில், வலுவான உள்நாட்டு தேவை மற்றும் உற்பத்தி, சேவை துறைகளில் வலுவான வளர்ச்சிக்கு இடையே 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐநாவின் பொருளாதாரம் குறித்த சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் , 2024ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.9 சதவீதமாக விரிவடையும். 2025ம் ஆண்டில் இது 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2025ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.6 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9சதவீதம்: ஐநா அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,UN ,Geneva ,United Nations ,Dinakaran ,
× RELATED ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா...