×

பங்குனி உத்திரம் சிங்காரவேலவர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை

கீழ்வேளூர், ஏப்.6: சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் நவனீதீஸ்வரர் கோயிலில் உள்ள சிங்காரவேலவருக்கு (முருகன்) நேற்று பங்குனி உத்திரம் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post பங்குனி உத்திரம் சிங்காரவேலவர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை appeared first on Dinakaran.

Tags : Swami ,Panguni Uttaram Singaravelavar Temple ,Kilivelur ,Panguni Uttra ,Chikal Singharavelar temple ,Nagapattinam ,Panguni ,Uttaram ,Singaravelavar ,temple ,
× RELATED திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமி