×

செறிவூட்டப்பட்ட உணவு வழங்கல்

சிதம்பரம், ஏப். 6: சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில், செறிவூட்டப்பட்ட அரிசியில் உணவு சமைத்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிதம்பரம் தனி வட்டாட்சியர் தனபதி, புவனகிரி வட்ட வழங்க அலுவலர் கோவிந்தன் முன்னிலையில், வட்ட வழங்கல் கிடங்கு கண்காணிப்பாளர் ஐயப்பன், ஆய்வாளர் ராமநாதன், மேலாண்மை இயக்குனர் குமரகுரு, பொது விநியோக நகர்வு மேலாளர் மாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர். கிடங்கு பணியாளர் ஊழியர்கள் மூலம் உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

The post செறிவூட்டப்பட்ட உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Tamil Nadu Consumer Goods Trading Corporation ,Lalpuram ,Dinakaran ,
× RELATED சீர்காழியிலிருந்து நாமக்கல்லிற்கு...