×

அனுமன் ஜெயந்தியையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த அறிவுரை: மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: அனுமன் ஜெயந்தியையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 6-ம் நாளான நாளை வியாழன் கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த விழா ராம அவதாரத்தில் ராமனுக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் குரங்கு உருவம் எடுத்து வாயுபுத்திரன் அனுமனாக அவதரித்ததாக ராமாயண புராணக்கதையில் கூறப்பட்டுள்ளது. அனுமன் பிறந்த நாளே மார்கழி மாதம், அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிவரும் அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. அனுமன் பிறந்தநாளன்று அவருக்கு விரதம் இருந்து அவரை வணங்கினால், அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி 41 நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். கர்நாடகாவில் அனுமன் ஜெயந்தியை அனுமன் விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் வாயிலாக அனுமன் ஜெயந்தியையொட்டி நாடெங்கிலும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. கேரளா, தமிழ்நாடு மற்றும் அகில இந்திய அளவிலும் அனைத்து மாநிலங்களிலும் இந்த விழாவை கொண்டாடப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்யுமாறும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் காரணிகள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ராமநவமி கொண்டாட்டங்களில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

The post அனுமன் ஜெயந்தியையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த அறிவுரை: மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Anuman Jayanthiyoti ,Union Government ,State Government ,Delhi ,Anuman Jayanthyothi ,Anuman Jayanthi ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...