×

எம்சிடி ஊழியர்கள் சம்பள நிலுவை விவகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயல்: உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம்

புதுடெல்லி: மூன்று நகராட்சிகளின் ஊழியர்களுக்கு  சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடித்து வரும் அரசுகளின் “பொறுப்பற்ற” செயல் குறித்து டெல்லி  உயர் நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர். டெல்லியில் பாஜ தலைமையிலான மூன்று மாநகராட்சிகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் கிடைக்கப்பெறாமல் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்க உத்தரவிடக்கோரியிருந்தனர். இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை ஐகோர்ட் ஒன்றாக இணைத்து விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது.  அப்போது, நீதிபதிகள் டெல்லி அரசு, எம்சிடி மற்றும் மத்திய அரசுகள் பற்றி காட்டமான விமர்சனங்களை தெரிவித்தனர். இதுபற்றி விசாரணையின் இடையே நீதிபதிகள் கூறுகையில், ”ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது, நிதி பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் எழ காரணம், டெல்லி அரசு எதிர்கட்சியை சேர்ந்த மத்திய அரசுக்கும்-மாநகராட்சிகளுக்கும் இடையில் சான்ட்வெஜ் போன்று சிக்கியுள்ளது தான். உங்கள் அனைவரிடமும்  (டெல்லி அரசு மற்றும் நகராட்சி நிறுவனங்கள்) நாங்கள் எவ்வளவு  வெறுப்படைகிறோம் என்பதை எங்களால் சொல்ல முடியாது. உங்களுக்கு ஊழியர்கள் மீது  எந்த அக்கறையும் இல்லை. நீங்கள் முற்றிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து  கொள்கிறீர்கள், ஏழை ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுவோர்  பற்றி கவலைப்படுவதில்லை” என்றனர். மேலும், ”கொரோனா தொற்று காலத்தில் பத்திரிகைகளில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிடுவதற்கு டெல்லி அரசுக்கு பணம் இருந்தது. சம்பளம் வழங்கமட்டும் இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் காம்பட்ரோலர் ஜெனரல் தணிக்கைக்கு உத்தரவிட நேரிடம் என டெல்லி அரசை எச்சரித்தனர். முடிவில், இரண்டு வாரகாலத்திற்குள் கடன் தொகையை ய சரிசெய்துகொண்டு எம்சிடிக்கு நிதியை பரிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். …

The post எம்சிடி ஊழியர்கள் சம்பள நிலுவை விவகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயல்: உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : MCT ,Supreme Court ,New Delhi ,Delhi government ,MCD ,High Court ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...