×

ஆரணி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் 1 லட்சம் சிதறு தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆரணி: ஆரணி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில், மஹாளய அமாவாசையன்று நடந்த திருவிழாவில் 1 லட்சம் சிதறு தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையன்று சிதறு தேங்காய் உடைக்கும் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் 98ம் ஆண்டு சிதறு தேங்காய் உடைக்கும் திருவிழா நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது.இதில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ெதாடர்ந்து, கோயிலில் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவு லட்சுமி நரசிங்க பெருமாள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. அப்போது, பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து சுவாமியை வழிபட்டனர். நேற்று நடந்த திருவிழாவில் சுமார் 1 லட்சம் சிதறு தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்….

The post ஆரணி லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் 1 லட்சம் சிதறு தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Arani Lakshmi Narasinghe Perumal Temple ,Arani ,Arani Lakshmi Narasinghe ,Mahalaya Mohammad ,Parumal Temple ,
× RELATED ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி...