×

மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மோகனப்பிரியாவுக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பிரசாரம்

செங்கல்பட்டு: மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனப்பிரியாவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். செங்கல்பட்டு மாவட்டம், 20வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில், ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.சல்குரு என்பவரது மகள் எஸ்.மோகனப்பிரியா போட்டியிடுகிறார். இதுபோல 21வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில், ராணி சல்குரு, 20வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சரளா, ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சத்யபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், வேட்பாளர்கள் 4 பேரும், நேற்று காலை கொட்டும் மழையில் காட்டாங்கொளத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமையில்  வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகளை சேகரித்தனர். அப்போது அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி பூசனிக்காய் உடைத்து, மலர்மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில்  ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் உமாபதி, டி.கே.விக்னேஷ், வக்கீல் பெருமாள், எம்ஜிஆர் மாவட்ட இணை செயலாளர்கள் சேகர், சுதாகர், கிளை செயலாளர் ரவிக்குமார், கனகராஜ், பாமக சார்பில் மேஸ்திரி ஆறுமுகம். உள்பட பலர் கலந்துக்கொண்டனர்….

The post மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மோகனப்பிரியாவுக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : District Councillor ,Mokanapririya ,Chengalputtu ,Councillor ,Mokanapriya ,Chambathkumar ,Mokanapria ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து