×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம்-ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர், மார்ச் 27: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நேற்று திருப்பூர் 1 வட்ட திமுக சார்பில் திருப்பூர் தியாகி குமரன் காலனி பகுதியில்  பொதுமருத்துவ, ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக பகுதி செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். வட்டக்  செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.  

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், பகுதி கழக செயலாளர் உசேன், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ் மாவட்ட நிர்வாகி திலக்ராஜ், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாநகர வர்த்தகரணி அமைப்பாளர் வடுகநாதன், சர்வசக்தி ஜன பேரவை நிறுவன தலைவர் சுரேஸ் சுவாமிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண் சிகிச்சை முகாம் மற்றும் பொதுமருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் ஏராளமான பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stal ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...