காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு, மார்ச் 27: பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் முன்பு காங்கிரசார், ராகுல் காந்தி எம்பிக்கு 2 ஆண்டுசிறை தண்டனையும், அதனை தொடர்ந்து எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, நகர தலைவர் தக்காளி கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், வட்டார தலைவர் ராஜேந்திரன், வட்டார செயலாளர் பொன்னையன், மாரண்டஅள்ளி நகர தலைவர் பால பார்கவன், நகர துணைத் தலைவர் பாலாஜிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய பாஜ அரசையும் கண்டித்து கோஷமிட்டனர். இதில் கவுன்சிலர் செந்தில், நிர்வாகி சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: