×

பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உதவி கண்டுகொள்ளாத பஸ் டிரைவர்கள் பெண் தற்கொலை வழக்கில் சப்-கலெக்டர் விசாரணை

பல்லடம்: பல்லடம்,  பொங்கலூர் அருகில் உள்ள மஞ்சப்பூரைச் சேர்ந்தவர் குமார் (25). இவருக்கும்  18 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்  பேரில், அவினாசிபாளையம் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். திருமணமாகி ஒரே  வருடம் ஆனதால் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம்  அரசு மருத்துவமனைக்கு வந்து தற்கொலை செய்த பெண்ணின் பெற்றோர் மற்றும்  உறவினர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

Tags : -Collector ,Palladam Government Hospital ,
× RELATED செங்கல்பட்டில் ஜமாபந்தி நிறைவு...