×

(தி.மலை) அரசு கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை மண்டல அளவிலான தடகளப் போட்டியில்

திருவண்ணாமலை, மார்ச் 26: மண்டல அளவிலான தடகளப் போட்டியில், நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வேலூர் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி வேலூர் தந்தை பெரியார் பாலிெடக்னிக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடந்தது. அதில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, தடகளப் போட்டிகளில் பங்கேற்ற திருவண்ணாமலை அடுத்த நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் உமாமகேஸ்வரன் 5000 மீட்டர் ஓட்டத்திலும், தடை தாண்டும் போட்டியில் மாணவன் வேல்முருகன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

அதேபோல், சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் மாணவன் தேவராஜ் வெள்ளிப் பதக்கமும், கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் ராமச்சந்திரன், வட்டு எறிதல் போட்டியில் மணிமாறன், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ராகேஷ், உமாமகேஸ்வரன், வேல்முருகன், சுபாஷ் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். இந்நிலையில், மண்டல அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவர்களை, நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிச்சாண்டி, உடற்கல்வி இயக்குநர் விஜய் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும், தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள் உமாமகேஸ்வரன், வேல்முருகன், வெள்ளி பதக்கம் வென்ற மணிமாறன் ஆகியோர், திருச்செங்ேகாட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Th ,. Malai ,Government College ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...