×

பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டையில் மகளிர் கவியரங்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மகளிர் கவியரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை நகரக்கிளை சார்பாக மகளிர் கவியரங்கம் நேற்று நடைபெற்றது.  மு.கீதா தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் தலைமைப்பண்பு என்ற தலைப்பில் மாலதி, இலக்கியம் என்ற தலைப்பில் மைதிலி கஸ்தூரிரெங்கன், ஊடகம் என்ற தலைப்பில் ரேவதி, சமுதாயம் என்ற தலைப்பில் கீதாஞ்சலி மஞ்சன், நகரம் என்ற தலைப்பில் டெய்சிராணி, தொழில் முனைவோர் என்ற தலைப்பில் நிலா பாரதி, சமூகசேவை என்ற தலைப்பில் இந்துமதி, குழந்தைகள் என்ற தலைப்பில் அமிர்தா, கல்வி என்ற தலைப்பில் கவின்பாரதி, கல்லூரி என்ற தலைப்பில் அட்சயா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். ேதமுஎகச நகரக் கிளை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Tags : Women's Poetry Hall ,Pudukottai ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...