×

கண்டியாநத்தம் காமாட்சி அம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் காமாட்சிஅம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் காமாட்சிஅம்மன் கோயில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கண்டியாநத்தம், பொன்னமராவதி, திருச்சி, புதுக்கோட்டை, துவரங்குறிச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மேலும் அடுத்த ஆண்டு வைகாசி மாதம் காமாட்சிஅம்மன் கோயில் கரக எடுப்பு திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கொன்னையூர் முத்துமாரிம்மன் கோயில் பங்குனித் திருவிழாவிற்கு கண்டியாநத்தம் உலோக உற்பத்தியாளர் தொழில் கூட்டுறவு சங்க வளாகத்தில் பொன்னமராவதி-கொப்பனாபட்டி சாலையில் செம்பொட்டல் என்ற இடத்தில் தண்ணீர்பந்தல் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.Tags : Amavasi ,Kandiyanantham Kamachi Amman Temple ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் கஜசம்ஹாரமூர்த்திக்கு அமாவாசை அபிஷேகம்