×

கோம்பை தோட்டத்தில் ரூ.15.50 லட்சத்தில் உயர்மட்ட நிழற்கூரை எம்எல்ஏ செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர், மார்ச் 20: திருப்பூர் கோம்பை தோட்டத்தில் ரூ.15.50 லட்சத்தில் உயர்மட்ட நிழற்கூரையை எம்எல்ஏ செல்வராஜ் திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 45 கோம்பை தோட்டம் பள்ளிவாசல் முன்பு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15.50 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட நிழற் கூரையை, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மு.க.உசேன், மேங்கோ பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் சலீம், வட்ட செயலாளர் முகமது அலி மற்றும் கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின், சிராஜ்தீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : MLA ,Selvaraj ,Gombai Garden ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில்...