×

கல்லூரி மாணவருக்கு திமுக நிதியுதவி வடவள்ளி- காளாப்பநாயக்கன்பாளையம் சாலை ரூ.3.60 கோடியில் சீரமைப்பு பணி தீவிரம்

தொண்டாமுத்தூர், மார்ச் 20:  கோவை வடவள்ளியில் இருந்து காளப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் ஈசா பூண்டி, கோவை குற்றாலம், மருதமலைக்கு வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம், ஊட்டி, மைசூர் போன்ற ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய அரசு நிதி உதவி ரூ.1 கோடியே 92 லட்சம் மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரோடுகள் சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து சோமையம்பாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரும், திமுக மாவட்ட பிரதி நிதியுமான இரா.ஆனந்தகுமார் கூறுகையில், ‘‘நீண்ட நாள் கோரிக்கையான வடவள்ளி முதல் காளப்பநாயக்கன்பாளையம் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறைவேற்றி தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, ஒன்றிய செயலாளர் குமார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

Tags : DMK ,Vadavalli ,Kalapanayakkanpalayam ,
× RELATED கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது!