×

முந்தல் மெயின் ரோட்டில் கழிவுநீர் குளமாக மாறியதால் துர்நாற்றம்

போடி, மார்ச் 19: போடி அருகே குரங்கணி சாலையில் முந்தல் மலை கிராமம் அணைக்கரைப்பட்டிக்கு கிராம ஊராட்சிக்கு கட்டுப்பட்டதாகும். இந்த முந்தல் மலை அடிவாரத்தில் போடி மெட்டு மூணார் மலைச்சாலையும், குரங்கணி மலைச்சாலை என கடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையாக இருக்கிறது. முந்தல் சாலை நுழைவாயிலில் ஆதிதிராவிடர் காலனியில் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். காலனியில் இருக்கும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடப்பதற்கு முக்கால் கிலோ மீட்டர் வரை வாறுகால் சாக்கடை அமைத்து மெயின் ரோடு கொண்டு வந்து பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் அப்படியே மெயின் ரோட்டில் கழிவுநீர் குளமாக தேங்கி சகதியாக குளமாக மாறி நிற்கிறது.

இதனை அடுத்து வனத்துறையின் செக்போஸ்ட்டும் அருகே இருப்பதால் தொடர்ந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி அருகில் ஆறாகவும் ஓடுக்கிறது. ஏற்கனவே தமிழக, கேரளா மாநில அரசு பஸ்கள் மற்றும் விவசாய வாகனங்கள் என பலதரப்பட்ட சுற்றுலா வாகனங்களும் அதனருகே வனத்துறை செக்போஸ்ட் நின்று கடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு அருகில் இருந்து பணி செய்ய முடியாமல் வனத்துறையினரும் பொதுமக்களும் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதோடு தொற்றுகளையும் உருவாக்கி வருவதால் ஒரு மாதத்தையும் கடந்துள்ளது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து புகார் செயதும் அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். உடனடியாக அருகில் வாறுகால் அமைத்து கழிவுநீர் தேங்காமல் கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுனர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Munthal Main Road ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே புதர்மண்டி...