×

ராஜபாளையம் அருகே 54 கிலோ குட்கா பறிமுதல்

 

ராஜபாளையம், ஜூலை 27: ராஜபாளையம் அருகே கார், டூவீலரில் கடத்தி வந்த 54 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. ராஜாமணி உத்தரவின் பேரில் தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினர் புத்தூர் அரசு மதுபானக்கடை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சாக்கு மூட்டைகளுடன் வந்த கார் மற்றும் டூவீலரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 54 கிலோ குட்கா பொருள்கள், கார், பைக் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்த தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், இனாம்கோவில்பட்டியை சேர்ந்த செல்லச்சாமி (62), அண்ணச்சாமி(46) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ராஜபாளையம் அருகே 54 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rajapaliam ,Rajapalayam ,Puttur ,D. S. B. Rajamani ,
× RELATED ராஜபாளையம் அருகே சிங்கம் நடமாடுவதாக...