×

சேஷம்பாடி ஊராட்சியில் ரேஷன்கடை புதிய கட்டிடம் திறப்பு

கும்பகோணம், மார்ச் 18: கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, சேஷம்பாடி ஊராட்சியில், 2021-2022ம் ஆண்டிற்கான கும்பகோணம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக மைய கட்டிடத்தை, கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், மாவட்ட பிரதிநிதிகள் கரிகாலன், மணிவாசகம், ஊராட்சி மன்ற தலைவர் யோகலெட்சுமி, சோழநாடு கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சூரியமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை கழக திமுக செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Seshambadi panchayat ,
× RELATED பொன்னமராவதி அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்