×

ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வேலூர் மாவட்டத்தில் அதிகளவில்

வேலூர், மார்ச் 17: வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று ஆர்டிஓவிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ கவிதா தலைமையில் நேற்று நடந்தது. நேர்முக உதவியாளர் நரசிம்மன் வரவேற்றார். இதில் வேளாண், ஆவின், கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: விவசாயி: ஊசூர் பகுதியில் தனியார் கட்டிடத்தில் புதிதாக நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் பூதூர் பகுதியில் அரசு கட்டிடத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும். அதிகாரி: இதுதொடர்பாக அரசுக்கு தெரிவிக்கப்படும்.
விவசாயி: கிராம பகுதிகளில் மாட்டு கொட்டகை அமைக்க கால்நடைத்துறை சார்பில் மானியம் தருகிறார்கள். ஆனால் அதனை சில இடங்களில் மட்டுமே தருகிறார்கள். அனைவருக்கும் மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகாரி: இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயி: பால் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் பசுக்களை வாங்க மானியம் தரவேண்டும். அதேபோல் ஆவின் கொள்முதல் நிலையங்களை மாவட்டம் முழுவதும் அதிகரிக்க திறக்க வேண்டும். குறிப்பாக வெட்டுவானம் பகுதியில் திறக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்து.
அதிகாரி: புதிய ஆவின் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: கோடைக்காலம் தொடங்க உள்ளதால் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் தீவனங்களை இருப்பு வைக்கவேண்டும்.
ஆர்டிஓ: கால்நடை துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: ஒரு டன் கரும்புக்கு தற்போது ₹3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. எனவே கரும்பு டன்னுக்கு ₹5 ஆயிரம் வழங்கவேண்டும். மேலும் ஆம்பூரில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரி: சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: வேலூர் மாவட்டத்தில் கோடை பயிர்களுக்கு ஏற்ற உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
அதிகாரி: அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடு இன்றி உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Vellore district ,
× RELATED அமெரிக்க கணவர் பெயரில் போலி சான்று...