×

திருச்சி அருகே மூதாட்டி, மகனை தாக்கி கொலை மிரட்டல்

திருவெறும்பூர்: திருச்சி அருகே மூதாட்டியையும் அவரது மகனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன் மனைவி உட்பட 3 பேர் மீது மணிகண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். திருச்சி அருகே ஓலையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(71). இவர் அந்த ஊரில் உள்ள பொது தண்ணீர் குழாயில் துணி துவைத்து குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவரும் வந்து கோவிந்தம்மாளிடம் பொது குடிநீர் குழாயில் எப்படி குளிக்கலாம் என தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கோவிந்தம்மாள் தனது மகன் சுப்ரமணியனிடம்(45) கூறியுள்ளார் அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன், கார்த்திக்கிடம் கேட்டதற்கு கார்த்திக் அவரது மனைவி ஷர்மிளா, அவரது சகோதரர் வேலுச்சாமி ஆகிய 3 பேரும் சுப்பிரமணியம் மற்றும் கோவிந்தம்மாளை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Trichy ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...