×

விதைத்த 45 வது நாளில் அறுவடை வெள்ளரி வளர்ப்பில் அதிக லாபம்

வலங்கைமான்: விதைத்த 45 வது நாளில் அறுவடை செய்யலாம். வெள்ளரி வளர்ப்பில் அதிக மகசூலும், லாபமும் கிடைக்கும். குறைந்த தண்ணீர் போதுமானது.
வெள்ளரிக்காய் ஒரு கொடிவகை தாவர வகைகளில் ஒன்று. இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு காயாகும். கோடைக்காலத்தில், பிப்ரவரி - மார்ச் மாதத்திலும் மழைக்காலத்தில் ஜூலை மாதத்திலும் பயிர் செய்யலாம். வெள்ளரிக்காயை களிமண்ணிலிருந்து மணல் கலந்த வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும். விதைகளை நடவு செய்வதற்கு, நிலத்தை குறுக்கு - நெடுக்காக 4 முதல் 5 முறை உழவு செய்ய வேண்டும். பின்பு, எட்டுக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து, நீளம், அகலம், ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் வரை கிடைக்கும். ஒவ்வொரு குழிக்கும் 2 கிலோ எருவைப் போட்டு, மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும். வடித்தக் கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். விதைகளை இந்தக் கரைசலில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

Tags :
× RELATED பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது