×

மக்களுக்கு இலவச வேட்டி,சேலை எம்எல்ஏ வழங்கினார்

பரமக்குடி, மார்ச் 14: பரமக்குடியில் அரசின் விலையில்லா வேட்டி,சேலைகளை பொதுமக்களுக்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். தமிழக அரசின் சார்பாக இலவசமாக வேட்டி,சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பரமக்குடி 27 மற்றும் 21வது வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில், அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் தலைமை வகித்தார். பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர் மன்றத் துணைத் தலைவர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏ முருகேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் அமுதாராணி சிவசுந்தரம்,கனிமொழி துரைமுருகன், பிரபாசாலமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...