×

மாசி மாத சங்கடஹர சதுர்த்தி தா.பழூர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

தா.பழூர்: தா.பழூர் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள விநாயகருக்கு மாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  இதில் விநாயகருக்கு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.  இந்த சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  விநாயகரை வணங்கி அருளை பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிவாச்சாரியார் மற்றும் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயில் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Sangadahara Chaturthi ,Lord Vinayaka ,Bhaur ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா