×

திருவாரூரில் எலுமிச்சை பழம் விலை உயர்வு

திருவாரூர், மார்ச்11: திருவாரூரில் 10 மடங்கு விலை அதிகரித்துள்ள எலுமிச்சைப்பழத்தின் விலையை கேட்டாலே மக்கள் வாங்குவதை புறக்கணித்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக எலுமிச்சைப் பழம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு எலுமிச்சைப் பழம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என விற்று வந்த நிலையில் தற்போது 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பொது மக்கள் எலுமிச்சைப் பழத்தின் விலையை கேட்டாலே வாங்காமல் சென்று விடுவ தால் வியாபாரமும் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின் றனர்.

குறிப்பாக வெயில் காலங்களில் எலுமிச்சைப் பழத்தின் தேவை என்பது அதிக மாக இருக்கும். கோடையில் வெப்பத்தை தணிக்கும் குளிர்பானங்களில் எலு மிச்சை முக்கியமாக இருக்கிறது.மேலும் கோவில் திருவிழாக்கள் உணவகங் கள் என எலுமிச்சைப் பழத்தின் தேவை எப்போதும் இருக்கிறது. இந்த வகை யில், எலுமிச்சம்பழம் தற்போது விலை அதிகரித்துள்ளதால் ஓட்டல் உரிமை யாளர்கள், பொதுமக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக, திருவாரூர் கடைத் தெருவில் விற்கப்படும் எலுமிச்சை பழங்கள் திருச்சி, ஈரோடு மட்டுமல்லாது நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள பரவை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில், இந்த வருடம் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எலுமிச்சைப் பழ விளைச்சல் என்பது குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரி விக்கின்றனர்.

இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளதாகவும் ,வரத்து குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் எலுமிச்சை விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ரம்ஜான் நோன்பு நேரங்களில் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகமாக இருக்கும் என்னும் அந்த நேரத்தில் எலுமிச்சைப்பழத்தின் விலை 20 ரூபாய் விற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Thiruvarur ,
× RELATED திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில்...