×

எடுக்காத எல்ஐசி பாலிசிக்கு ரூ.5லட்சம் முதிர்வு தொகை வந்துள்ளதாகவும் ஒடிபியை கூறும்படி எனக்கே அழைப்பு வந்தது

திருவாரூர், மார்ச்11: எடுக்காத எல்ஐசி பாலிசிக்கு ஐந்து லட்சம் முதிர்வு தொகை வந்துள்ளதாகவும் ஒடிபியை கூறும்படியும் எனக்கே அழைப்பு வந்தது என திருவாரூரில் நடை பெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் பேசினார். திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெருகிவரும் சைபர் குற்றங்கள் என்கிற தலைப்பில் சைபர் குற்ற கருத்தரங்கம் விளமலில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக சட்ட ஆய்வுகள் பள்ளி உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் பாலசண்முகம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக சமுகப்பணிகள் துறை முதுகலை ஆராய்சியாளர் சரண்யா சுந்தர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கிற்கு தலைமை வகித்து எஸ்பி சுரேஷ் குமார் பேசுகையில், முகம் தெரியாத நபர்களை இணையத் தில் நண்பர்களாக ஏற்கக் கூடாது. இணையத்திலோ, செல்போனிலோ உங்கள் சுய விபரங்கள் குறித்து யார் கேட்டாலும் சொல்லக் கூடாது. ஏடிஎம் கார்டு பின்புறம் உள்ள 16 இலக்க எண், ஓடிபிஎண் , ஆதார் எண், பான் கார்டு எண் இவைகளை யாரிடமும் சொல்லக்கூடாது. ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது உங்கள் ரகசிய எண்ணை எழுதக் கூடாது. ஆன் லைன் மூலம் பொருட்கள் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ் சல் மற்றும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க கூடாது.கூகுள் தேடல் மூலம் கிடைக்கப்பட்ட கஸ்டமர் கேர் மற்றும் ஹெல்ப் லைன் எண்களை அவர்களின் அலுவலக வெப்சைடில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்போன் டவர் அமைப்பதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறக்கூடாது.

டவர் அமைக்க நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. அதுபோல் வங்கியில் தவறாக பூர்த்தி செய்யும் செல்லான்களை உடனடியாக கிழித்து விட வேண்டும் என்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் டாக் டர் கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ஒரு முறை நான் காரில் சென்று கொண்டிருந்த போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் நீங்கள் ஒரு பேராசிரியர் தானே, நீங்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு எல்ஐஜி பாலிசி எடுத் திருக்கிறீர்கள். அது தற்போது ரூ.5 லட்சமாக முதிர்வு அடைத்துள்ளது. உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை சொல்லுங் கள் என்றனர்.

எனக்கு நன்றாக தெரியும், நான் எல்ஐசி பாலிசி எதுவும் எடுக்கவில்லை. நான் சற்று சுதாரித்துக் கொண்டு அதெல்லாம் வேண்டாம் என்று கூறினேன். சார் வரக்கூடிய ஐந்து லட்சத்தை ஏன் விடுகிறீர்கள் என்று கூறி னார்கள். எனவே, இது போன்று நம்மை ஏமாற்ற அவர்கள் அங்கு காத்துக் கொண்டிருக்கிறார் கள். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நான் ஜப்பானில் இருக்கும் போது அங்கு உள்ள பேராசிரியர் என்னிடம் பயன்பாடு இல்லாமல் மொபைலை பயன்படு த்தக் கூடாது என்றார். அதுபோன்று, அங்கு மதிய உணவு நேரமான ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை எவ்வளவு முக்கியமான கால் வந்தாலும் அவர்கள் எடுப்பதில்லை. அங்குள்ள மக்களுக்கு டெக்னாலஜியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில் அது போன்று இல்லை என்றார். முன்னதாக சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி வெள்ளத்துரை வரவேற்றார். சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா நன்றி கூறினார்.

Tags : OTP ,
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி