×

பெரம்பலூரில் ஏடிஎமில் வாடிக்கையாளர் விட்டு சென்ற ரூ.10 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டல் உரிமையாளருக்கு பாராட்டு

பெரம்பலூர்,மார்ச்11: பெரம் பலூரில் ஏ.டி.எம் மெஷி னில் வாடிக்கையாளர் ஒரு வர் விட்டுச்சென்ற, ரூ10 ஆ யிரம் ரொக்கப் பணத்தை பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டல் உரிமையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூரில் உள்ள தனி யார் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் நல்லபூவான்(40). இவர் நேற்று(10ம்தேதி) காலை பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

ஏடிஎம் சென்டருக்குள் நுழைந்த நல்லபூவான் தனது ஏடிஎம் கார்டை பையிலிருந்து எடுத்து மிஷினுக்கு கொண்டு சென்ற போது அந்த மிஷினில் அதற்கு முன்பு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயன்று, பணம் உடனடியாக வராததால் ஏமாந்து, வெளியே சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பணம் ரூ.10,000 அப்ப டியே இருப்பதைக் கண்டு, நாம் கார்டை நுழைக்கும் முன்பே, பின்நெம்பர் போடும் முன்பே, எடுக்க வந்த 10ஆயிரம் வெளியே நிற்கிறதே என நினைத்து ஆச்சரியமடைந்தார்.

பின்னர் மெஷின் கோளா றுகாரணமாக தனக்கு முன் பு பயன்படுத்திய வாடிக் கையாளரின் பணம், தாம தமாக வெளியேவந்து நிற் பதை அறிந்து, அதனை பத் திரமாக எடுத்த நல்லபூவான் அத னைஅப்படியே பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலையத்தி ற்கு எடுத்து வந்து அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், செந்தாமரைக் கண்ணன், சங்கர், செல்வராஜ் ஆகி யோர் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் ஒப்படைத்தார்.நல்ல பூவானின் செயலு க்கு,இன்ஸ்பெக்டர்,சப் இன் ஸ்பெக்டர்கள் பாராட்டு தெ ரிவித்தனர்.

அதனை தொட ர்ந்து பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குத் தொடர்பு கொண்டு, குறிப் பிட்டநேரத்தில் அத்த ஏடிஎம் மிஷினில் வாடிக்கையாளர் ஒருவர் பணம்விட்டுச் சென்ற விவரத்தைத் தெரிவித்து சிசிடிவி காட்சிப் பதிவின் மூலம விட்டுச்சென்ற வாடிக்கையாளர் யார் என தெரிந்தால் அவரிடம் பணத்தை ஒப்படைக்கலாம் என காவ ல்துறைமூலம் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து ஸ்டேட் வங்கி ஊழியர்கள் ஏடிஎம் சிசிடிவி காட்சி பதிவை கொண்டும் பயன்படுத்திய வாடிக்கை யாளரின் எண்ணைக் கொ ண்டும் அவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி