×

அரசு கலைக்கல்லூரியில் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது. பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தொடங்கியது. இதனை கல்லூரி முதல்வர் மேகலா தொடங்கி வைத்தார்.

கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். துறைத் தலைவர்கள் சிவக்குமார் கணேசன், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தொடர்ந்து 100 மாணவ, மாணவிகள் பயிற்சிகளை பெற்றனர். இந்த பயிற்சியின் போது வேலைவாய்ப்புகளை தெரிந்து, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறை குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜலட்சுமி எடுத்துரைத்தார். தினமும் பாடவாரியாக பேராசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தினர். நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணி கணேஷ், மதன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு கையேடுகள் மற்றும் புத்தகங்களை வழங்கினர்.


Tags : TNPSC ,Govt Arts College ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை