×

சின்னாளபட்டியில் வீட்டில் புகுந்த 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள் பிடிப்பு

நிலக்கோட்டை: சின்னாளபட்டியில் தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்குடும்பத்தினர் உடனே ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் பதுங்கியிருந்த கொம்பேறி மூக்கன் வகையை சேர்ந்த பாம்பு ஒன்றை பிடித்தனர். அப்போது அதனுடன் மேலும் சில கொம்பேறி மூக்கள் பாம்புகள் இருப்பதை கண்டனர். தொடர்ந்து வீட்டிலுள் மறைந்திருந்த மேலும் 5 கொம்பேறி மூக்கன் பாம்புகளை ஒன்றன்பின் ஒன்றாக சுமார் ஒரு மணிநேரம் போராடி பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட பாம்புகளை சாக்கு பைகளில் வைத்து உரிய பாதுகாப்புடன் ஆத்தூர் வனப்பகுதிக்குள் விட்டனர். ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் 6 கொம்பேறி மூக்கள் பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...