×

விவசாயிகள் பேரணி விளக்க பிரசார இயக்கம்திருச்

செங்கோடு:  திருச்செங்கோடு நகர் பகுதிகளில், ஏப்ரல் 5ம்தேதி டில்லியில் நடைபெறவுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் பேரணியை விளக்கும் விதமாக, பிரசார இயக்கம் நடைபெற்றது.  இதற்கு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினரும், விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினருமான செந்தில்குமார், மாவட்ட குழு உறுப்பினர் ராயப்பன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட பொருளாளர் தங்க ரத்தினம், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் வேலாயுதம், விவசாய தொழிலாளர் சங்க திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் ரத்தினம், விசைத்தறி தொழிலாளி கோபால், டிஒய்எப்ஐ கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, டில்லி பேரணியின் நோக்கங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர். தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட சூரியம்பாளையம் 9வது வார்டு, 18வது வார்டு மற்றும் 21வது வார்டு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டவர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


Tags : Farmers Rally Explanation Propaganda Movement ,
× RELATED ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்