தேசிய சாலை பாதுகாப்புவாரம் திருவாரூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருவாரூர் , மார்ச்10: 52வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறை இணைந்து நடத்திய தலைகவசம் அணிய வேண்டிய அவசி யம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் பழைய பேரூந்து நிலை யம் அருகில் நேற்று நடந்தது.இதில், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டு தலைகவசம் அணிய வேண்டிய அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார். தலைக்கவசம் அணிந்து வந்த 200 க்கு மேற்பட்டவர்களுக்கு ஓஎன்ஜி.சி சார்பில் டீசர்ட் வழங்கப்பட்டது.

தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டி களுக்கு தலைக்கவசம் அணியா விட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்த பிரசார கையேடு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், ஓஎன்ஜிசி பாது காப்பு சுற்று சூழல் அமைப்பு தலைவர் முதன்மை பொது மேலாளர் சிவ சங்கர், துணை பொது மேலாளர்கள் தியாகராஜன், வேனுகோபால், ஒருங் கிணைப்பாளர் முருகானந்தம் , டவுன் எஸ்ஐ தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: