×

பழையனூர் கோயில் கும்பாபிஷேக விழா

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள நவநீத பெருமாள், தேவி, பூதேவி கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன் தினம் புண்ணியாகவாஸனம், வாஸ து சாந்தி, வேத பாராயணம், முதல் கால யாக பூஜை நடந்தன. தொடர்ந்து, நேற்று காலை மங்கள இசை, இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, மண்டப சாந்தி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர், காலை 10 மணியளவில் யாக சாலையிலிருந்து கும்பம் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்தது மூலவர் நவநீத பெருமாள் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அனுமன், கருடாழ்வார், நவக்கிரகம் ஆகிய கோயில் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பழையனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Palayanur Temple Kumbabhishek ,
× RELATED சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர்...