×

ஏஐடியூசி சார்பில் கோரிக்கை மனு

தர்மபுரி:  தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர் சங்கம், கட்டுமான பெண் தொழிலாளர் அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி, விருபாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு அரசு தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை நலவாரியத்தில் அமல்படுத்த வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர் ஓய்வூதிய வயதை, 50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு, மகப்பேறு சட்டப்படி 6 மாத சம்பளம் வழங்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களுக்கு அனைத்து வேலைகளிலும் 90 சதவீதம் ஒதுக்கி, சட்டம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி பொது செயலாளர் மணி, விஏஓ அலுவலகத்தில் மனு வழங்கினார். இதே போல் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 30 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஏஐடியூசி சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டது.

Tags : AIDUC ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்