×

பாஜகவும் அதிமுகவும் கூட்டணி தர்மத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் வேலூரில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் பேட்டி

வேலூர், மார்ச் 9: பாஜகவும், அதிமுகவும் கூட்டணி தர்மத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேலூரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். வேலூரில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவும் பாஜகவும் தமிழக மக்களின் நலனை கருதி இணைந்து செயல்பட வேண்டும். இதில் கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே நிர்வாகிகள் கட்சி மாறுவது சகஜம் தான். இதற்காக விமர்சனங்களை வைக்க கூடாது. தமிழக மக்கள் எல்லா தலைவர்களையும் எடை போட்டு வைத்திருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால் ஆன்லைன் சூதாட்டத்தை சட்டத்தின் மூலம் மனிதநேயத்துடன் அதனை தடுக்க புதிய சட்டங்களை கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது தமிழக அரசு. வடமாநில தொழிலாளர்கள் பிரச்னை என்பதை தமிழக அரசின் உளவுத்துறை முன் கூட்டியே அறிந்து அதனை தடுத்திருக்க வேண்டும். அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை தடுத்திருந்தால் பிரச்னை இவ்வளவு பெரிதாக வளர்த்திருக்காது. பீகாரிலிருந்து குழுக்கள் இங்கு வந்து ஆய்வு செய்வது என்பது தமிழகத்திற்கு தேவையில்லாதது. ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக எடுத்த நிலங்கள் அதிகம் உள்ளது. தற்போது மத்திய மாநில அரசுகள் விவசாய நிலங்களை 100 சதவிகிதம் எடுக்க கூடாது. அவ்வாறு எடுப்பதை அப்பகுதி மக்களும் ஏற்கமாட்டார்கள். துப்புரவு பணியாளர்களுக்கு வேலூர் மாநகராட்சி அரசு நிர்ணயித்த தொகையினை வழங்கி பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து முடிக்க வேண்டும். பெண்கள் விவகாரத்தில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு போதுமான இட பங்கீட்டை அளிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உள்ளது. அதை தான் 3 மாநில தேர்தல்கள் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BJP ,AIADMK ,dharma Tamaga ,GK Vasan ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...