×

விண்ணப்பங்கள் வரவேற்பு 22 வது வார்டில் சுற்றி திரிந்த மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம்

தஞ்சாவூர்: கடந்த பிப். 1ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரியும் கால்நடைகளை காப்பகத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கும் பணி தொடங்கப்பட்டது. பிடிபடும் மாடுகளை 10 நாட்களுக்குள் அபராதம் செலுத்தி அழைத்து செல்லாவிட்டால் ஏலம் விடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இதன்படி நேற்று 22 வார்டு கோர்ட் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது. பின்பு பிடிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளருக்கு ரூ. 9,000 அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags :
× RELATED பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை