×

காவிரி-வைகை-குண்டாறு கருத்து கேட்பு கூட்டம்

விராலிமலை: விராலிமலை தாலுகா அலுவலகத்தில் காவிரி-வைகை-குண்டாறு திட்டம் தொடர்பான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி தலைமை வகித்தார். விராலிமலை தாசில்தார் சதீஸ், காவிரி-வைகை-குண்டாறு திட்ட தாசில்தார் ஆரமுத தேவசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிலம் கையக படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டத்தின் கீழ் காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்காக குன்னத்தூர் வட்டம் கலிமங்கலம் பகுதிகளில் நிலம் எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அதில் சிலர் இத்திட்டத்தின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தங்களது கோரிக்கைகளாக வைத்தனர். அதற்கு வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்தகுமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், விராலிமலை வருவாய் ஆய்வாளர் சுரேந்திரன், மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Cauvery ,Vaikai ,Gundaru ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த சக்தியும்...