×

பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து

சாவுதர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி அருகே ஜெ.தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கவிப்பிரியா(17), அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், திருப்புத் தேர்வில் கவிப்பிரியா குறைவாக மதிப்பெண் எடுத்திருந்ததால் பெற்றோர்  கண்டித்துள்ளனர்.இதனால், மனம் உடைந்த கவிப்பிரியா கடந்த 27ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை பெற்றோர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிப்பிரியா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கூச்சுவாடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(20). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவியை காதலித்து வந்தார். இந்நிலையில், திருமணம் செய்யும் நோக்கில், மாணவியை கடத்தி சென்றார். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில், மாணவியின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா